உள்ளுராட்சி தேர்தலுக்கான புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் கட்சிகளுக்குள் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் புதிய கூட்டணி பேச்சுவார்த்தையில் இருந்து சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி வெளியேறியுள்ளது.
அத்துடன் மணிவண்னண் தலைமையிலான அணியினரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
குறிப்பாக பொதுவான சின்னத்தினை தெரிவு செய்வதிலேயே இணக்ப்பாடு எட்டப்பவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட்,சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பன புதிய கூட்டணியாக உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன.
மேலும் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி, ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளிட்ட மேலும் சில தரப்புகள் ஒன்றாக போட்டியிட இணக்கம் ஏற்கனவே எட்டப்பட்டநிலையில் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர்.
இது தொடர்பான வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்திருந்தார்
Be First to Comment