மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகின்ற இலங்கை பாதுகாப்பு சபையின் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.
பிரதேச செயலகங்களின் ஊடாக பெற்றோரினால் சமூக பாதுகாப்பு சபையில் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுள், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெகுமதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அந்தவகையில், கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப் பரீட்சையின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் 150 மாணவர்கள், இந்த வெகுமதிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களுள் 100 மாணவர்களுக்கான வெகுமதிகள் வழங்கி வைக்கப்பட்டன. –
Be First to Comment