ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்திற்கு எதிர்ப்பு தொிவித்து யாழ்.பல்கலைகழகத்திலிருந்து பேரணியாக சென்றவர்கள் யாழ்.அரசடி பகுதியில் வழிமறிக்கப்பட்டு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைகழகத்தலிருந்து ஆரம்பமான பேரணி தேசிய பொங்கல் விழா நடைபெறும் நல்லுார் ஆலய சுற்றாடலுக்கு செல்ல முயற்சித்த நிலையில் அரசடி பகுதியில் பொலிஸாரும், அதிரடிப்படையினரும் வழிமறித்துள்ளனர்.
இதனால் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், பொலிஸாரின் தடையை தாண்டி பேரணியாக வந்தவர்கள் பயணிக்க முயற்சித்த நிலையில்,
பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
Be First to Comment