கொழும்பு பொரளை அனைத்து புனிதர் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள போதிலும், அது தொடர்பில் இதுவரை முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்து தேவாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கைக்குண்டு வைக்கப்பட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார், விசாரணைகள் துரிதப்படுத்தப்படாமைக்கு காரணம் என்ன உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Be First to Comment