Press "Enter" to skip to content

உள்ளூராட்சி தேர்தல் – நாளை முதல் வேட்புமனு தாக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனு தாக்கல் நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான அவகாசம் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடுகள் இன்றும் இடம்பெற்றன.

உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக, 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு கடந்த 4  ஆம் திகதி அறிவித்திருந்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்கள் தொடர்பான அறிவித்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து, அதற்கேற்ப கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

18 மாவட்டங்களைச் சேர்ந்த 153 உள்ளூராட்சி மன்றங்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள்  தேர்தல் செயலகங்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *