யாழ்.மாநகரசபை புதிய முதல்வர் யார் என்பது தொடர்பாக ஆராய்வதற்காக நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்வு இன்றி நிறைவுக்கு வந்துள்ளது.
நாளை 19 ஆம் திகதி யாழ்.மாநகர சபைக்கான புதிய முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் யாரை முதல்வராக தொிவு செய்வது என்பது தொடர்பில்,
யாழ்.மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது புதிய முதல்வரை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யலாம். என பேசப்பட்ட நிலையில் கட்சி உறுப்பினர்கள் பலர் அதனை எதிர்த்துள்ளனர்.
புதிய முதல்வராக சொலமன் சிறில், இமானுவேல் ஆனால் ஆகியோருடைய பெயர்கள் உறுப்பினர்களிடையே பேசப்பட்ட நிலையில்
இருவரில் ஒருவரைக் கூட எவரும் முன்மொழியாத நிலையே காணப்பட்டது. இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானங்களும் இன்றி முடிவுற்ற நிலையில்
இன்று புதன்கிழமை காலை மீண்டும் கூடி முடிவெடுக்கலாம் என கூறிய நிலையில் கலந்துரையாடல் முடிவுற்றது.
Be First to Comment