Press "Enter" to skip to content

நாளை முதல்வர் தெரிவு

யாழ் மாநகர முதல்வர் பதவியிலிருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் இராஜினாமா செய்திருந்த நிலையில் புதிய முதல்வர் தெரிவு தொடர்பில் கட்சிகளிடையே தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன.

குறிப்பாக புதிய முதல்வர் போட்டியில் மீண்டும் மணிவண்ணன்  போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில் இதுவரை மணிவண்ணன் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ அறிவித்தல் எவையும் வெளியாகவில்லை.

இந்நிலையில் மாநகர சபையின் முதல்வர் தெரிவு நாளைய தினம்(19)  இடம்பெறவுள்ள நிலையில் தமிழரசு கட்சி சார்பில் சிறில் போட்டியிடுவதற்கான சாத்திய கூறுகள் காணப்பட்ட போதிலும் இன்றைய தினம் சொலமன் சிறில் தான் முதல்வர் தெரிவிலிருந்து விலகுவதாகவும் முன்னாள் முதல்வரான ஆனோல்ட் முதல்வர் தெரிவில் களமிறங்க உள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதன்படி நாளைய தினம் தமிழரசு கட்சியின் சார்பில் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மாநகர முதல்வராக முதல்வர் போட்டியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில்  யாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் யார் என்று நாளை மதியம் தெரியவரும் என கூறப்படுகின்றது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *