Press "Enter" to skip to content

முள்ளிவாய்க்காலில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன்!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் 15 வயதுடைய சிறுமியுடன் குடும்பம் நடத்திய 21 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியினைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் சிறுமியுடன் கடந்த 8 மாத காலமாக குடும்பமாக வாழ்ந்து வந்து, சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.

தமிழர் பகுதியில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன்! | A Young Man Who Had A Family With A Girl

 கர்ப்பவதி கிளினிக்

 

சிறுமியை கர்ப்பவதி கிளினிக்கிற்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற போது, சிறுமியின் வயதினை அறிந்த சட்டவைத்திய அதிகாரிகள் சிறுமி கர்ப்பமானது தொடர்பிலான பரிசோதனையினை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த சிறுமி 7 மாத கர்ப்பமாக காணப்பட்ட நிலையில் சிறுமி பாதுகாப்பான மருத்துவ பராமரிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன்! | A Young Man Who Had A Family With A Girl

 

சட்டத்திற்கு முரணான இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டுளார்.

கைதான இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.மேலும் சிறுமியினை சட்டத்திற்கு முரணாக குடும்பமாக வாழ வைத்த சிறுமியின் பெற்றோர்களை விசாரணை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *