பெண்ணின் சடலம் ஒன்று குளத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை நாயன்மார்கட்டு குளத்தில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம்
குறித்த சடலம் குளத்தில் இருந்து மிதந்து கரையை அடைந்துள்ள நிலையில் ஊர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் சடலமாக காணப்படுவது யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பொலிஸார் சடலத்தை அடையாளம் காண்பது தொடர்பாகவும் மரணத்திற்கான காரணம் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்வத்துரை மகேஸ்வரி (வயது 56) எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Be First to Comment