Press "Enter" to skip to content

ஐஎம்எஃப் கூட்டம் நாளை மறுதினம்;முதல் கடன் தவணையாக 330 மில்லியன் அ.டொலர் பெறப்படும்-ஷெஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு கூட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளதுடன், இலங்கைக்கான கடன் வசதிக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


இதன்படி இம்மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் கடன் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நிதியத்தின் செயற்குழு இது குறித்து முடிவெடுத்து செய்தியாளர் சந்திப்பின் மூலம் அறிவிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியை இலங்கை எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *