கசிப்பு வியாபாரம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக கூறி வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் மட்டக்களப்பு – திருப்பெருந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை புதன்கிழமை (26) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த 24ம் திகதி திங்கட்கிழமை இரவு 9.20 மணியளவில்
இரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரு ஓட்டோக்களில் 8 பேர் கொண்ட குழுவினர் உட்புகுந்து கசிப்பு விற்பனை தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கியது நீங்கள் தானே என தெரிவித்து
வீட்டிலிருந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் மீது தாக்கதல் நடாத்திவிட்டு அங்கிருந்த கனணி உட்பட பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத் தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் தொடர்பில் பொலிசாரின் தொடர் விசாரணையில் அவர்கள் தலைமறைவாகியிருந்த இடம் புதன்கிழமை (26) பொலிசார் முற்றையிட்டப்பட்டது.
இதன்போது இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Be First to Comment