தென்னிந்தியாவிலிருந்து நேற்றைய தினம் (27-04-2023) சூப்பர் சிங்கர் பிரபலங்கள் உட்பட விஜய் டிவி பிரபலங்கள் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கை வருகை தந்துள்ளனர்.
சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பங்குபற்றும் இசை நிகழ்ச்சி இன்றையதினம் (28-04-2023)யாழ் முற்றவெளி மைதானத்தில் பெருந்திரளான ரசிகர்களின் உற்சாகமான வரவேற்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.
மேலும், இந்த நிலையில் சூப்பர் சிங்கர் பிரபலங்களான ஸ்ரீதர் சேனா, மானசி, ஹரிப்பிரியா உள்ளிட்டோர் மாத்திரமன்றி கலக்கப் போவது யாரு (KPY) நிகழ்ச்சியிலிருந்தும் சில பிரபலங்கள் கலந்து கொண்ட அதேவேளை மூக்குத்தி முருகன், ஷாம் விஷால், குரேஷி ஆகிய விஜய் டிவி பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
Be First to Comment