சமூக ஒற்றுமையுடன் எதிர்காலத்தை தூக்கி நிறுத்த உழைப்பாளர் தினத்தில் உறுதிபூணுவோம் – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி தெரிவிப்பு!
————-
உழைப்பவர்களே உலகின் உன்னதமானவர்கள். அதனால் தான் அவர்களின் உன்னத உழைப்பின் மகிமையை போற்றி இந்த உழைப்பாளர் நாள் உலகமெங்கும் மே மாதம் இன்றைய நாளில் அனுஸ்டிக்கப்படுகின்றது என யாழ் மாநகரசபையின் முன்னாள் முல்வர் திருமதி யோகேஸ்வரி பற்கணராஜா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உழைப்பாளர் தின கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில் –
எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தளவில் அதன் ஒவ்வொரு துறைசார் வேலைகளை எடுத்துக் கொண்டாலும் அதை மேற்கொள்பவரது உழைப்பு உழைப்பின் வெகுமதியாகவே பார்க்கப்படுகின்றார்கள்.
அதுமட்டுமல்லாது அவர்களது உழைப்பிற்கேற்ற வகையில் அவரவர் பொறுப்புகளும் வாய்ப்புகளும் அவர்களை சென்றடைகின்றது.
யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் குறிப்பாக யாழ் மாநகர அதிகாரத்துக்குள் துரையப்பாவின் காலத்துக்கு பின்னர் இன்றுவரை வறிய நிலையிலுள்ள பாமர மக்களுக்கு பாரபட்சமின்றி அரச தொழில் வாய்ப்புகளை வழங்குவதானாலும் சரி அவர்களுக்கான அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார தேவையாக இருந்தாலும் சரி அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளானாலும் சரி அவற்றுக்கெல்லாம் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் எமது கட்சியும் அதன் தலைவர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவும் மட்டுமே உரிமையாளர்களாக இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது எமது தேசத்து பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பொருளாதார பிரச்சினைகள் என பல்வேறு தேவைகளுக்கும் ஆண்களுக்கு சரிநிகரான சந்தர்ப்பங்கள் வழங்கி பெண்களை அவர்களது உழைப்பால் தலைதூக்க செய்வதிலும் எமது கட்சி வரலாறு படைத்துள்ளது.
தமது வாழ்வாதாரத்துக்கான பொருளாதார ஈட்டல் எனச் சொல்லிக்கொண்டு இந்த தேசத்திற்காக துப்புரவுப் பணிகளிலிருந்து பொருளாதார வல்லநர்கள் வரை உழைக்கும் பாமர மக்களுக்கு அவரவர் திறமைகளை இனங்கண்டு சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுத்த பெருமையும் எமது கட்சிக்கு உண்டு.
அதேநேரம் வேற்றுமைகள் பாரபட்சங்கள் என்ற எண்ணக்கரு இல்லாது அனைவரது உழைப்பிற்கும் அதற்கேற்ற அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எமது கட்சியின் தலைமை உறுதியாக உள்ளது.
இதனால் தான் அரச பதவிநிலைகளில் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை தவிர ஏனையோருக்கு அது எட்டாக்கனி என்றிருந்த காலச் சூழலை தகர்த்து பாமர மக்களும் அரச பதவிகளை அலங்கரிக்க செய்தவர் எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா.
அதனால் தான் இன்றும் பாமர மக்களின் நாயகனாக அவர் வலம்வந்துகொண்டிருக்கின்றார்.
அந்தவகையில் இவ்வாண்டும் கடந்த ஆண்டுகளை போன்று உழைப்பாளர் தினம் வந்து போய்விட்டது.
ஆனால் அந்த உழைப்பாளர் தினம் எடுத்துச் சொல்லிச் சென்றிருக்கும் உணர்வுகளையும் வரலாற்று படிப்பினைகளையும் நம் எமது செஞ்சங்களில் சுமந்தவர்களாக பேதங்களின்றி “ஒன்றே குலம் ஒருவதே தேவன்” என்ற சமூக ஒற்றுமையுடன் எமது எதிர்காலத்தை தூக்கி நிறுத்த இந்த உழைப்பாளர் தினத்தில் உறுதிபூணுவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment