மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அநுராதபுரம், பதுளை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும், அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்களினாலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Be First to Comment