Press "Enter" to skip to content

மன்னிப்பு கேட்காவிட்டால் சஜித்திடமிருந்து விலகிக்கொள்வேன்!

மலையக மக்களுக்கு நாளாந்த வேதனமாக 3 ஆயிரத்து 250 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்றைய தினம் இடம்பெற்ற தொழிலாளர் தினக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இதனை தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் முன்னெடுக்கப்படும் அனைத்து வேலைத்திட்டங்களிலும் மலையக மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, தேசிய கொள்கைத் திட்டம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மலையக மக்களை புறக்கணித்து பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன.

அது மாத்திரமின்றி மடுல்சீமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிற்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வருகைத்தரவில்லை.

இதற்காக எதிர்கட்சி தலைவர் மடுல்சீமை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

மன்னிப்பு கோராத பட்சத்தில் நான் அவருடன் தொடர்ந்து பயணிக்கப் போவதில்லை.

மூவேளைக்கான உணவில்லை, காணி உரிமை அற்றவர்களாக மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மேற்குறிப்பிட்ட விடயங்களை நாங்கள் நியாயமான முறையிலேயே கோரிவருகின்றோம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது கோரிக்கைகளை வென்றெடுக்க நாம் ஆயுதம் ஏந்தியதில்லை.

இவ்வாறு மலையக மக்கள் அனைத்து விடயங்களிலும் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுகளுக்கமைய நாள் சம்பளமாக 3250 ரூபாய் மலையக மக்களுக்கு வழங்கப்படுவது அவசியமாகும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *