கிளிநொச்சி மாவட்டம் – இரணைமடு கனகாம்பிகை ஆலய திருவிழாவில் கலந்துகொண்ட ஒரு அடியவர் 1 1/2 பவுண் தங்க நகையை ஆலய வாசலில் தவறவிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் பல முறை தேடியும் அவரது நகை கிடைக்கவில்லை.
“இப்போது தங்கப் பவுண் விற்கின்ற விலைக்கு கண்டெடுத்தவர்கள் தருவார்களா? என்பதுதான் அங்கு இருந்த பல அடியவர் பலரின் கதையாக இருந்தது.
இந்த நிலையில் தங்கச் சங்கிலியை தவறவிட்டவர் இறைவனை வேண்டிக்கொண்டிருந்த வேளை அங்கு நின்ற சிறுமியின் செயலும் சிலரை சிந்திக்க வைத்தது. அதாவது தவறவிட்ட தங்கச் சங்கிலியானது 4 வயது சிறுமியின் கண்ணில் பட்டிருக்கின்றது.
அவர் தான் கண்டெடுத்த தங்கச்சங்கிலியை தொலைத்த அடியவரிடம் ஒப்படைத்திருந்தார்.
மேலும், குறித்த சிறுமியின் செயலை பாராட்டிய கனகாம்பிகை அம்பாள் ஆலய பரிபாலன சபையினர் சிறுமிக்கு வாழ்த்துக்களையும் அன்பளிப்பு பரிசில்களையும் வழங்கி கௌரவப்படுத்தியிருந்தார்கள்.
Be First to Comment