Press "Enter" to skip to content

பதவிகளை எதிர்பார்த்து நாங்கள் அரசியல் செய்யவில்லை – சஜித் பிரேமதாச

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று,நாட்டின் பல பகுதிகளிலும் மேதின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பேரணிகளும் மேதின கூட்டங்களும் இன்று முற்பகல் முதல் ஆரம்பமாகின.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் கொழும்பு – பீ.ஈ குணசிங்க விளையாட்டு மைதானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பதவிகளை எதிர்பார்த்து தங்களது தரப்பு அரசியல் செய்யவில்லை என குறிப்பிட்டார்.

முறைமை மாற்றத்துக்காகவே தாங்கள் அரசியல் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் கூட்டணி இன்றைய தினம் இரண்டு இடங்களில் மேதினக் கூட்டங்களை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, முதலாவது கூட்டம் கொழும்பிலும், இரண்டாவது கூட்டம் பதுளையிலும் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *