யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள புழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞன் பழக்கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
பலாலியை சேர்ந்தவரும் தற்போது அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வசித்து வருபவருமான வசந்தகுமார் ஸ்ரீகாந்த் (வயது 36) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் காணப்படும் நிலை சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ளமையால் , கொலையா ? தற்கொலையா ? என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Be First to Comment