கனடாவில் பாலியல் சேவை பெற்றுக் கொண்டு அதற்கு பணம் செலுத்த தவறியதாக றொரன்டோவைச் சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
32 வயதான ஜனார்த்ததன் சத்தியநாதன் என்ற நபருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாலியல் சேவை வழங்கும் ஒருவரிடம் சேவை பெற்றுக் கொண்டு அதற்கான கொடுப்பனவை செலுத்த தவறியதாக ஜனார்த்தனன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டர்ஹம் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் இவ்வாறு பாலியல் சேவை பெற்றுக்கொள்ளப்பட்டு பணம் செலுத்தத் தவறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் சேவை வழங்கும் பெண் ஒருவரை தொடர்பு கொண்டு அவரிடம் சேவையை பெற்றுக் கொண்ட குறித்த நபர், சேவைக்கான பணம் செலுத்த முடியாது என கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த நபர் வேறும் பெண் ஒருவரிடமும் இவ்வாறு பாலியல் சேவை பெற்றுக் கொண்டு பணம் செலுத்த தவறியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
Be First to Comment