Press "Enter" to skip to content

நடிகர் மனோ பாலாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய விஜய்!

தமிழ் சினிமாவில் இயக்குநரும் பிரபல காமெடி நடிகரான மனோபாலா (Manobala) இன்றைய தினம் மதியம் (03-05-2023) தனது வீட்டில் மரணமடைந்தார்.

கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே மனோபாலா உயிரிழந்துள்ளார்.

நடிகர் மனோ பாலாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய விஜய்! | Vijay Paid Tribute Mano Bala By Garlanding Him

இந்த நிலையில் மனோ பாலாவின் இழப்பு திரையுலகத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் மனோபாலாவின் உடலானது தற்போது அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மனோ பாலாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்திற்கு நடிகர் விஜய் திடீரென கையில் மாலையுடன் இன்று மாலை வருகை தந்தார்.

நடிகர் மனோ பாலாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய விஜய்! | Vijay Paid Tribute Mano Bala By Garlanding Him

மனோ பாலா இல்லத்திற்கு திடீரென விஜய் வந்ததால் பல மக்களும் அங்கு அதிகம் கூடிய நிலையில் பல கமெராக்களும் அங்கே குவிந்தன.

இந்நிலையில் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டதுடன் விஜய் மனோபாலாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் மனோ பாலாவின் இறுதி நிகழ்வுகள் நாளை (04-05-2023) காலை 10.30 நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *