Press "Enter" to skip to content

விகாரைக்கு எதிராக போராடிய ஐவர் கைது – தையிட்டியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

தையிட்டி விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பேர் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பலாலி காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

சந்தேகநபர்களில் மூன்று பேர் நேற்றிரவும், இன்று காலை மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *