Press "Enter" to skip to content

தமிழ்க் கட்சிகளுக்கு மகிந்தவின் உபதேசம்

உரிய அனுமதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக் கோருவது நியாயமான செயலன்று என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் தொடர்பில் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எல்லா வியத்திற்கும் இனவாத, மதவாதக் கருத்துக்களை கக்குவதை தமிழ்க் கட்சிகள் உடன் நிறுத்த வேண்டும்.

தமிழ்க் கட்சிகளுக்கு மகிந்தவின் உபதேசம் | Demanding Removal Of Thaiti Thissa Viharai Mahinda

தமிழ்க் கட்சிகள்

 

அமைதி வழியில் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்லும் தமிழ் மக்களை போராட்டம் என்ற போர்வையில் அவர்களை வன்முறைக்கு இட்டுச் செல்வதுதான் தமிழ்க் கட்சிகளின் இலக்காக இருக்கின்றது.

உங்கள் அரசியல் சித்துவிளையாட்டுக்களுக்காகத் தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்காதீர்கள் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை உரிய அனுமதிகளைப் பெற்று அமைக்கப்பட்டது. அதனை அகற்றக் கோருவது எந்த வகையிலும் நியாயமானதில்லை என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *