நிலவும் கடும் மழை காரணமாக நாடு முழுவதும் உள்ள பல முக்கிய ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தனகலு ஓயா, களனி, நில்வளவை, களு மற்றும் ஜின் கங்கைகளின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 67 வீதத்தில் நிரம்பியுள்ளன.
எனினும், மழைவீழ்ச்சியின் தரவுகளின்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் எந்த முக்கிய ஆறுகளும் வெள்ள மட்டத்தை எட்டும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், நிலவும் கடும் மழை காரணமாக நாடு முழுவதும் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நீடித்துள்ளது.
Be First to Comment