Press "Enter" to skip to content

யாழில் ஒரு வாரமாக இயங்காத பாடசாலை: மாணவிக்கு மர்மமான தொலைபேசி அழைப்பு

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் சமீப காலமாக சர்ச்சையான விடயங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி மீள கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் புதிய அதிபர் நியமனமும் இடம்பெற்றுள்ளது.

யாழில் ஒரு வாரமாக இயங்காத பாடசாலை: மாணவிக்கு மர்மமான தொலைபேசி அழைப்பு | Mysterious Phone Call By A School Girl In Jaffna

யாழ்ப்பாணம் – அரியாலை பூம்புகார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலேயே இவ்வாறான செயல் இடம்பெற்று வருகின்றது.

இந்த பாடசாலையில் கல்வி கற்பித்த ஆசிரியரொருவர் மாணவி ஒருவருடன் தகாத முறையில் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக தெரிவித்து பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.

யாழில் ஒரு வாரமாக இயங்காத பாடசாலை: மாணவிக்கு மர்மமான தொலைபேசி அழைப்பு | Mysterious Phone Call By A School Girl In Jaffna

தொலைபேசியூடாக கணித பாடத்தை கற்பிக்கவுள்ளதாகக் கூறிவிட்டு மாணவியுடன் தகாத சொற்பிரயோகங்களை உபயோகித்து உரையாடிய சந்தர்ப்பத்தில் குறித்த உரையாடல் காணொளி பெற்றோரால் பதிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து பாடசாலைக்கு முன்பாக பெற்றோர் ஆசியர்களுடன் எதிர்ப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

யாழில் ஒரு வாரமாக இயங்காத பாடசாலை: மாணவிக்கு மர்மமான தொலைபேசி அழைப்பு | Mysterious Phone Call By A School Girl In Jaffna

இதனைத்தொடர்ந்து ஆசியர்கள் கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக ஆசிரியர்களாகிய தமக்கு பாதுகாப்பு இல்லை என கூறியே கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

குறிப்பாக ஆசிரியர்கள் வலயக் கல்விப் பணிமனையிலும் முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்தனர்.

யாழில் ஒரு வாரமாக இயங்காத பாடசாலை: மாணவிக்கு மர்மமான தொலைபேசி அழைப்பு | Mysterious Phone Call By A School Girl In Jaffna

இதனையடுத்து வலயக்கல்விப் பணிப்பாளர், அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பாடசாலை நிர்வகத்தினர் பாடசாலைக்கு நேரடி கள விஜயத்தை மேற்கொண்டு பெற்றோர்கள் மற்றும் கிராமத்தவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இவ் விடயம் தொடர்பாக வலையக்கல்விப்பணிப்பார் இவ்வாறு தெரிவிக்கின்றார்.

மாணவியின் பிரச்சினைக்குரிய தொலைபேசி அழைப்பின் பதிவானது பொலிஸாரால் விசாரணைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைககப்பட்டுள்ளது.

யாழில் ஒரு வாரமாக இயங்காத பாடசாலை: மாணவிக்கு மர்மமான தொலைபேசி அழைப்பு | Mysterious Phone Call By A School Girl In Jaffna

இதேவேளை குறித்த பிரச்சினையின் பின்னர் பாடசாலையில் குழப்பம் விளைவித்து, பாடசாலைச் சொத்துக்களைச் சேதமாக்கிய குற்றச்சாட்டில் குறித்த மாணவியும் தாயாரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் முகமாக பாடசாலை அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள் கடந்த 03-05-2023 ஆம் திகதி தம்முடன் கலந்துரையாடியிருந்ததுடன் மீள கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலையக்கல்விப்பணிப்பார் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் ஒரு வாரமாக இயங்காத பாடசாலை: மாணவிக்கு மர்மமான தொலைபேசி அழைப்பு | Mysterious Phone Call By A School Girl In Jaffna

குறிப்பாக இதுவரை காலமும் அதிபர் இல்லாது இயங்கிய குறித்த பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனமும் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை குறித்த பாடசாலையில் தொடர்ந்து கடமையாற்ற முடியாது என்ற ரீதியில் முறைப்பாடளித்த அனைத்து ஆசிரியர்களும் இடமாற்றத்திற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளதாக வலையக் கல்விப் பணிப்பார் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த ஆசிரியரை பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு இந்த அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகிளினால் மாணவி மற்றும் ஆசிரியர்களே மிகவும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்ட இலக்கமும் குறித்த ஆசிரியரின் இலக்கம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *