தனது நண்பனை தலைக்கவசத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் நபரொருவரை மினுவாங்கொடை காவல்துறையினர் நேற்று (7) கைது செய்துள்ளனர்.
மது அருந்தியபோது, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஹொரம்பெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடைய அஸ்வென்ன வத்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Be First to Comment