Press "Enter" to skip to content

நினைவேந்தலைக் கைப்பற்ற முன் நாடாளுமன்றைக் கைப்பற்றுக- யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்

நினைவேந்தலைக் கைப்பற்ற முன் நடாளுமன்றைக் கைப்பற்றுக!

: நினைவேந்தல்களில் பொது ஒற்றுமை பேணப்பட வேண்டும்

: ரணிலின் தந்திரங்களை புரிந்து தமிழ் பிரதிநிதிகள் ஒருமித்து செயற்படுக

: தனிவாத்தியம் இசைக்க முயற்சிக்க வேண்டாம்

தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், நினைவேந்தல்களைக் கைப்பற்ற வேண்டும் என கூறும் தரப்பு, சிதறிப் போய்க் கிடக்கும்
நடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை முதலில் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை
விடுத்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் தர்சன் இவ்வாறு
கோரிக்கை விடுத்தார்.
‘சிதறியிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒன்றுபடுத்தியது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மாத்திரமே.
இன்று பல்வேறுபட்ட தரப்புக்கள் பல்வேறு கதைகளைக் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.
நினைவேந்தல்களைக் கைப்பற்ற வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றார்கள். அவர்கள் முதலில் முழுமையாக பாராளுமன்றத்தைக் கைப்பற்றி விட்டு நினைவேந்தல்களைக் கைப்பற்றுமாறு
நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
இன்று 22 ஆசனங்கள் (வட-கிழக்கில்) காணப்படுகின்றன. 22 ஆசனங்களும் எந்தவொரு தமிழ்க் கட்சியாலும் நிரப்பப்பட்டுள்ளதா? ஆகவே தமிழ் மக்கள் மத்தியில் எந்தவொரு அபிலாசைகளும் எந்தவொரு கட்சியாலும் இதுவரை நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், (நினைவேந்தலைக் கைப்பற்றுதல்) இவ்வாறான கருத்துக்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவை.
தமிழர் தாயகத்திலே இன்று எத்தனையோ போராளிகள் எத்தனையோ பாதிக்கப்பட்ட தரப்புக்கள் அமைதியாக இருந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில்,
எங்கேயோ இருந்த தரப்புக்கள்தான் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்றன.
பல்கலைக் கழக மாணவர் ஒன்றியமாக, பொதுக்கட்டமையுடன் இணைந்து இம்முறையும் மே 18 மிகவும் சுமூகமான முறையிலே முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாங்கள் கடந்த காலங்களிலே சில துரதிஸ்ட வசமான சம்பவங்களை உணர்ந்துகொண்டிருக்கின்றோம்.
திலீபனின் நினைவேந்தலாக இருக்கலாம், அன்னை பூபதியின் நினைவேந்தலாக இருக்கலாம், அனைத்து இடங்களிலுமே, குழப்பங்கள் விளைவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
தமிழர் தாயகத்திலே சர்வதேசத்திற்கு நாங்கள் நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டுமெனில், அந்த நினைவேந்தலிலே நாங்கள் ஒரு ஒற்றுமையாகச் செயற்பட்டால் மாத்திரமே எங்களுக்குரிய நீதி கிடைக்கப்பெறும். ரணில் ராஜபக்சவினுடைய நரித் தந்திரங்களை புரியாது, எங்களுடைய தமிழ் பிரதிநிதிகள் ஏகோபித்த நிலையில், ஒருமித்துச் செயற்பட வேண்டும். மாறாக தனிவாத்தியம் இசைக்கக் கூடாது என்பதை மாணவர்களாக நாங்கள் வினையமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது அனைவராலும் மறுக்க முடியாததும் மறக்க முடியாததுமான ஒரு தொட்டுணர முடியாத மரபுரிமைச் சின்னமாக ஈழத் தமிழர்களின்
வரலாற்று உணவாக அடுத்த சந்ததிக்குக் கடத்தப்பட வேண்டும்’ என்றார்
தமிழர் பகுதிகளில் இடம்பெறும் நினைவேந்தல்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்ற வேண்டும் என அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் அண்மையில் கருத்தொன்றை வெளியிட்ட நிலையிலேயே, நினைவேந்தல்கள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம், தமிழ் சமூகத்திடம் இவ்வாறான கோரிக்கையொன்றை இன்று விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *