இராஜபக்சேக்கள் உகாண்டாவிற்கு கொண்டு சென்ற பணத்தை மீள வழங்குமாறு உகாண்டா ஜனாதிபதியிடம் கோருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொள்வதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
காலிமுகத்திடல் போராட்டம்
இலங்கையிலிருந்து ராஜபக்சவினர் உகாண்டாவிற்கு விமானங்களில் பணத்தினை எடுத்துச்சென்றதாக குற்றம்சாட்டப்பட்டதாகவும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களும் இது தொடர்பில் பதாகைகளைத் தொங்கவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இன்றும் நாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கத் தயார் எனவும், உகாண்டாவிலிருந்து பணத்தை மீளக்கொண்டுவருவதற்கு ஜனாதிபதியை தலையிடுமாறு கோரவுள்ளதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.
மேலும், அன்றைய தினம் பதாதைகளை ஏந்தியிருந்தவர்களும் உகண்டா சென்று பணத்தை கொண்டு வர தலையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Be First to Comment