கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் செயற்பட்டு வருகின்ற சீநோர் நிறுவனத்தின் 55 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதமர் தினேஸ் குணவர்த்தன கலந்து கொண்டார்.
இலங்கை மன்ற நிறுவகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மனிஷ நாணயக்கார, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்த்தன, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சீநோர் நிறுவனத்தின் செயற்பாடுகளை விஸ்தரித்து, அதன் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை எடுத்துச் செல்லும் நோக்கில், சீநோர் நிறுவனத்திற்கான இணையத்தளம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு செயற்றிறன் மிக்கதாக முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது – சீநோர் நிறுவனத்தின் 55 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.
Be First to Comment