கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவர் ஒருவர் வீதி விபத்தில் அகால மரணமடைந்துள்ளார். உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்த தவராசா சாருஜன் என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..
கிளிநொச்சி போலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பக்கணை பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் நேற்று (09) அதிகாலை 3.30 குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி கண்டாவலைப் பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதியதி விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் தவராசா சாருஜன் என்ற 18 வயதுடைய கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞன் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.சம்பவ இடத்தில் இரண்டு கால்நடைகளும் இறந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதே வேளை அதிகாலை 3.30 மணிக்கு குறித்த மாணவனும் அவனது நண்பனும் எதற்காக சென்றார்கள்? குறித்த மோட்டார் சைக்கிளை கொடுத்தவர் யார்? என்பன தொடர்பாக பொலிசார் கவணம் செலுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது மாணவர்களிடத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் மாணவர்களைக் கொண்டு போதைப் பொருள்கள் கடத்தும் செயற்பாடுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment