களுத்துறையில் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது மாணவியை ஹோட்டலிற்கு அழைத்து சென்ற நபர் தொலைபேசி ஒன்றின் அழைப்பின் பின்னர் மாணவி கதிரையில் ஏறி ஜன்னலால் குதித்தார் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
நான் அந்த யுவதியுடன் ஹோட்டலில் நடனமாடிக்கொண்டிருந்தவேளை வேறு யாரிடமிருந்தோ அவரின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. அந்த தொலைபேசி அழைப்பினால் கோபமடைந்த அவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டவரை ஏசினார்,நீ எனது வாழ்க்கைய அழித்துவிட்டாய் கீழ்த்தரமாக நடக்காதே என ஏசினார் என பொலிஸாரிடம் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் கலக்கமடைந்தவராக காணப்பட்ட அவர் கதிரையில் ஏறி ஜன்னலில் இருந்து கீழே பாய்ந்தார்.
Be First to Comment