வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பிள்ளை ஒன்றின் தாயை சுட்டுக் கொன்றதுடன் சந்தேக நபர் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா, பறையனாலங்குளம், நீலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்து பெண் ஒருவர் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சந்தேக நபரும் இன்று காலை நிலியமோட்டை கோவிலுக்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நீலியமோட்டை பிரதேசத்தில் குடியேறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்னர் குறித்த சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
Be First to Comment