இலங்கை வம்சாவளியான தமிழர் ஒருவர் பிரான்சின் பெரிஸில் சிறந்த சிற்றுண்டி தயாரிப்பாளருக்கான பரிசை வென்றுள்ளார்.
தர்ஷன் செல்வராஜா என்பவரே இந்த பரிசை வென்றுள்ளார்.
இதன்படி அவர் 4 ஆயிரம் யூரோக்கள் வெற்றி கொண்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மாளிகைக்கு சிற்றுண்டிகளை வழங்குவதற்கான வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தமது சிற்றுண்டியை சுவைப்பாராயின் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அதனை அரண்மனைக்கு எடுத்துச் செல்வது உற்சாகமாக இருப்பதாகவும் தர்ஷன் செல்வராஜா கூறியுள்ளார்.
Be First to Comment