முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இன்று (13) காலை 7.00 கைவேலிப்பகுதியில் 10 அகவையுடைய பாடசாலை சிறுமி தனியார் வகுப்பிற்காக தாயாரினால் உந்துருளியில் கொண்டு சென்று இறக்கி விட்டு தாயார் சென்றுள்ளார்.
இந்த தருணம் பார்த்து வீதியில் உந்துருளியில் சென்ற இளைஞர்கள் சிறுமியினை அழைத்து கையினை பிடித்துக்கொண்டு முகத்தினை துணியால் பொத்திப்பிடித்த போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
வீதியால் சென்ற மக்கள் இதனை அவதானித்து சத்தமிட்ட போது இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளார்கள்.
சிறிது நேரத்தின் பின்னர் கண்விழித்துக்கொண்ட சிறுமியின் தகவலின் படி குறித்த பகுதியினை சேர்ந்த இளைஞனின் பெயரினை சிறுமி கூறியதற்கு இணங்க கிராம அபிவிருத்தி சங்கத்தினர் இளைஞனை அழைத்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலீசார் 23 அகவையுடைய 02 ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியினை சேர்ந்த இளைஞனை கைதுசெய்துள்ளதுடன் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
பாதிக்கப்பட்ட சிறுமியினையும் அவரது தாயாரினையும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டுசென்று அங்கு சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய சிறுமி மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவிலும் 10 வயது சிறுமி கடத்தல் முயற்சி மக்களால் முறியடிப்பு!! மயங்கிய நிலையில் சிறுமி மீட்பு..!
More from UncategorizedMore posts in Uncategorized »
- அநுரவின் வெற்றியை முன்னிட்டு… பருத்தித்துறையில் தமிழ் மக்கள் ஏற்பாடு செய்த கூட்டம்!
- வேட்பு மனு கையேற்பு இன்று முதல் ஆரம்பம்
- அரசியலுக்கு ‘குட் பாய்’! தம்மிக்க பெரேரா எடுத்த அதிரடித் தீர்மானம்
- வங்குரோத்தில் இருந்த நாட்டை மீட்டெடுத்த ரணிலை கண்டுகொள்ளாத மக்கள்..! வஜிர ஆதங்கம்
- பொதுத் தேர்தலில் களமிறங்க தயங்கும் காஞ்சன உள்ளிட்ட இளம் அரசியல்வாதிகள்! வெளியான தகவல்
Be First to Comment