நியூஸிலாந்தில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நியூஸிலாந்தின் வெலிங்டனில் உள்ள 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதியொன்றில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்டடத்தில் சிக்கியிருந்த சிலர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் பலர் அங்கு சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், தீயை அணைக்க சுமார் 20 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Be First to Comment