தனது தாயின், கணவர் எனக்கூறப்படும் நபரினால் தாக்கப்பட்ட 17 வயது இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
50 வயதான சந்தேகநபர், கடந்த 12 ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்குச் சென்று, மேற்படி, இளைஞரின் தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன்போது, மதுபோதையில் வீட்டுக்கு வந்து சத்தம் போடவேண்டாம் என குறித்த இளைஞர் அவரை திட்டியுள்ளார்.
அதனையடுத்து, சந்தேக நபர் இரும்பு கம்பியால் இளைஞரை தாக்கியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எவ்வாறாயினும், அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
Be First to Comment