சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் தவறான பதிவொன்று குறித்து காவல்துறை இன்று (18) விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பில் காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுவர்களைக் கடத்த முற்பட்ட குழுக்கள் தொடர்பாக அக்மீமன காவல்துறையினர் பகிரங்கமாக அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளதாக ஒரு வைரலான சமூக ஊடகப் பதிவு தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், அக்மீமன காவல்துறையினரால் அவ்வாறான எந்தவொரு பொது அறிவித்தலையும் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுள்ள காவல்துறை தலைமையகம், குறித்த சமூக ஊடகப் பதிவு ‘போலியானது’ என நிராகரித்துள்ளனர்.
மேலும், அக்மீமன அல்லது யக்கலமுல்ல காவல்துறை பிரிவுகளில் இதுபோன்ற சிறுவர் கடத்தல்கள் அல்லது கடத்தல் முயற்சிகள் எதுவும் பதிவாகவில்லை என அக்மீமன காவல்துறை பொறுப்பதிகாரியை (OIC) மேற்கோள் காட்டி காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இதுபோன்ற தவறான, பொய்யான பதிவுகளால் பொதுமக்கள் எவரும் பீதியடைய வேண்டாம் என காவல்துறை கோரியுள்ளது.
Be First to Comment