முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஆத்ம சாந்தி பூசை நடத்தப்பட்டது.
அகில இலங்கை சைவத்தமிழ் மன்றத்தின் மதகுருக்களால் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் (கப்பலடியில்) பிதிர்கடன் ஆத்ம சாந்தி பூசை இடம்பெற்றது.
பிதிர்கடன்
இதன்போது இறுதி போரில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிதிர்கடன் எனப்படும் நீர்த்தார் சடங்கினை கப்பலடி கடற்கரையில் அச்சகர்களால் நடத்தப்பட்டுள்ளது.
இதில் மபெருமளவானோர் கலந்து கொண்டு உயிரிழந்த தங்கள் உறவுகளுக்கான ஆத்மா சாந்தி சடங்கினை மேற்கொண்டு முள்ளிவாய்க்கால் கப்பலடி கடலில் கரைக்கும் சம்பிரதாயங்களையும் மேற்கொண்டுள்ளார்கள்.
Be First to Comment