Press "Enter" to skip to content

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை!

முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவு தினம் தமிழர் தேசமெங்கும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் திருகோணமலை நகர்ப்பகுதியில் குறித்த நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு எதிராக நீதிமன்றால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் திரு.சமன் கே.பியரன்ன தொடுத்த வழக்கின் கோரிக்கையை பரிசீலித்து, திருகோணமலை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழர் பகுதியொன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை! | Ban On Mullivaikal Memorial Events In Tirumala

 

அதன்படி இன்று திருகோணமலையில் மாபெரும் நினைவேந்தல் நடைபெறவுள்ள தாகவும், பொது சுகாதாரம் மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும், இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் உட்பட 10 க்கும் மேற்பட்டோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *