Press "Enter" to skip to content

வசந்த முதலிகேவை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட சஜித்

வசந்த முதலிகேவை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட சஜித்

Digital News Team 

 

குடிமக்களின் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் தொடர்ச்சியாக மீறும் நாடாக இலங்கை மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்த சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேவை இன்று ராகமையிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக வசந்த முதலிகே மேலும் சிலருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் சர்வாதிகார சக்தியை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் தேர்தலை தாமதப்படுத்துவதன் மூலம் மக்களின் உரிமைகளை மீறுவதாக பிரேமதாச மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தகைய அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஒருபோதும் பணியாற்ற மாட்டார்கள் என்றும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *