பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இரண்டு சார்ஜன்ட்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய 3 பேரை இடமாற்றம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக உள்ளக விசாரணையையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Be First to Comment