கிளிநொச்சி – உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட நில அளவை, அமைச்சர் டக்ளஸ் தேவானதா மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினை தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையிட்டிருந்த நிலையில், அதனை , ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிலமைகளை தெளிவுபடுத்தியதன் விளைவாக நில அளவைப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானதா அவர்களின் இணைப்பாளர் கோ.றுஷாங்கன் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன், ஆலய நிர்வாகசபை உறுப்பினர்கள், பக்தர்கள், உள்ளூர் மக்களைச் சந்தித்து அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ற அமைச்சரின் செய்தியை நேரில் தெரிவித்துள்ளார்.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் பசுபதிப்பிள்ளை, உபதலைவர் சிவஞான சுந்தரம், செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் அமைச்சரின் இணைப்பாளருடன் நீண்ட நேரம் கலந்துரையாடி, நில அளவைப் பணிகள் நிறுத்தப்பட்டமைக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானதா அவர்களிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment