Press "Enter" to skip to content

ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்தது

பொருளாதார நெருக்கடியானது ஆசியாவின் 20 ஏழ்மையான நாடுகளில் இலங்கையையும் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்சைடர் மொங்கி என்ற தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இலங்கை, வளர்ந்து வரும் ஒரு நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் நாணய மதிப்பிழப்பு, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாட்டால் மனிதாபிமான அவசரநிலை போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு நிலைவரப்படி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஆசியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்கள், இந்த அளவீட்டின் அடிப்படையில் ஆசியாவிலுள்ள 20 ஏழ்மையான நாடுகளைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வறுமையானது உணவு, சுத்தமான நீர், சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி மற்றும் சமூக சேவைகள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான அணுகல் உட்பட பல பரிமாணங்களையும் உள்ளடக்கியது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *