அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலிலும் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான ஜீன் ஆண்டி என்ற பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜீன் ஆண்டி என்ற வயோதிப பெண்ணின் பணத்தை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் பணப்பையில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்திருந்த நிலையில் இவர் கடுமையான மது மற்றும் சூதாட்ட பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபருக்கு இரண்டு லட்சம் ரூபாய் சரீரப் பிணை நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment