கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியிருக்கவேண்டியதில்லை. அதற்காக நினைவேந்தலுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தையும் நான் நியாயப்படுத்தவில்லை.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:–
“நினைவேந்தலில் அமைதியைக் குலைக்கும் வகையில் எந்த நிகழ்வுகளையும் பகிரங்கமான இடங்களில் நடத்தக்கூடாது. கொழும்பில் அன்று நடந்த நிகழ்வு தேவையற்றது. அதற்காக, அதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தை நியாயப்படுத்தவில்லை.
குழப்பம் ஏற்படும் என்றும் தெரிந்தும் ஒரு நிகழ்வை குறித்த இடத்தில் நாம் நடத்துவோமாயின் அதுவும் தவறானது. எதிர்காலத்தில் இப்படியான நிகழ்வுகளை நடத்துவோர் நன்கு சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.
தமிழ் மக்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை தத்தமது இடங்களில் அமைதியாக நினைவேந்த முழுச் சுதந்திரம் உண்டு.” –என்றார்.
Be First to Comment