Press "Enter" to skip to content

சிறுமிகள் துஷ்பிரயோகம் – மற்றுமொரு ஆசிரியர் விளக்கமறியலில்

பாடசாலை சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு மேலதிக வகுப்பின் ஆசிரியர் இந்த மாதம் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் உள்ள மேலதிக வகுப்பு ஒன்றின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் பல சந்தர்ப்பங்களில் குறித்த ஆசிரியர் சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதுடன், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 6 சிறுமிகளின் பெற்றோரினால் பொலன்னறுவை காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்சத்தில் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்காமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய 41 வயதான குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இதேபோன்றதொரு சம்பவம் களுத்துறை பகுதியில் பதிவாகியிருந்ததுடன் 16 பாடசாலை சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் கைது செய்யப்பட்டு இந்த மாதம் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *