Press "Enter" to skip to content

ஐரோப்பிய நாடொன்றில் மற்றுமொரு இலங்கையர் பலி

இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் மேலும் ஒரு இலங்கையர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி ரோம் தலைநகர் கொர்னேலியா பகுதியில் இரவு இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரோம் நகரில் வசிக்கும் மன்னகே மார்கோ என்ற 25 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காண்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றில் மற்றுமொரு இலங்கையர் பலி | Sri Lanka Death In Italy

 

அன்றைய தினம் இரவு தனது நண்பர்கள் குழுவைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்றுள்ள விதம்

சிறிய மின்சார ஸ்கூட்டரில் சென்றபோது, ​​ரோம் வீதியில் ஓடிக்கொண்டிருந்த சரக்கு வான் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் இத்தாலியின் ரோம் தலைநகரில் பிறந்து பெற்றோருடன் வசித்து வந்த இலங்கை பூர்வீகம் கொண்டவர் என தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில் மற்றுமொரு இலங்கையர் பலி | Sri Lanka Death In Italy

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரோம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இத்தாலியில் கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *