அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி இன்றைய தினம் (24) டொலரின் கொள்வனவு விலை 297.98 ரூபாவாகவும் விற்பனை விலை 311.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 299.19 ரூபாவாகவும் விற்பனை விலை 312.33 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
Be First to Comment