நடிகையின் வீட்டில் பணிபுரிந்த பெண்ணின் மரணம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாரபட்சமற்ற விசாரணையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க கூறியதையடுத்து வாதங்கள் சூடுபிடித்தன.
பதுளையைச் சேர்ந்த தமிழ் யுவதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் எனவும், அதில் அரசியல் இலாபம் பெற எதிர்க்கட்சிகள் முயற்சிக்கக் கூடாது எனவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முதலில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எழுப்பிய போது, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களும் அதனை பின்பற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை சகித்துக்கொள்ள முடியாதுஎனவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என பிரதமர் குணவர்தன இதன் போது தெரிவித்துள்ளார்
Be First to Comment