Press "Enter" to skip to content

வடக்கில் தமிழ் ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தும் அரசியல் கட்சிகள் – செய்தியாளர்கள் குற்றச்சாட்டு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதன் ஆதரவாளர்களும் வடக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தும் முகமாக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தையிட்டி பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு சில உறுப்பினர்கள் அங்குள்ள விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களுடைய ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் ஊடகவியலாளர்களை மலினப்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையும் ஆதரித்திருப்பது சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த முறை இடம்பெற்ற தையிட்டி போராட்டத்தின் போது இரவு பகலாக ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் ஊடகங்களுக்கு கருத்து கூற விருப்பமில்லை என தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கருத்து கூற மறுத்ததுடன் தங்களுக்கு ஊடகங்கள் தேவையில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் அவ்விடத்தை விட்டு சென்றிருந்தனர்.
இந்நிலையிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதரவாளர்கள் என தங்களை காட்டிக் கொள்ளும் ஒரு சிலர் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் சமூக ஊடகங்கள் ஊடாக விமர்சித்து வருகின்றனர்.
அதனுடைய தொடர்ச்சியே இன்றும் ஊடகவியலாளர்கள் மீதான கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
கடந்த முறை இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எந்தவித கருத்துகளையும் கூறமாட்டோம் என கூறிவிட்டு தம்முடைய கட்சியினுடைய சமூக ஊடகங்களுக்கு கருத்துக்களை அவர்கள்தெரிவித்து இருந்தார்கள்.

இதனால் குறித்த போராட்டத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளியேறியிருந்தனர்.

இந்தநிலையில் ஊடகவியலாளர்களையும் ஊடக நிறுவனங்களையும் சமூக ஊடகம் மூலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் தாக்கி பதிவிட்டு வருவதாக எமது செய்தியாளர் குற்றம்சுமத்தியுள்ளார்.
More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *