தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த பணத்தை திருடிய குற்றச்சாட்டில் வங்கி பாதுகாப்பு அதிகாரியை கைது செய்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தையில் உள்ள தனியார் வங்கியின் பாதுகாப்பு அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் வங்கியின் உதவி முகாமையாளர், பாதுகாப்பு அதிகாரியுடன் 90 இலட்சம் ரூபாவை கடந்த 21 ஆம் திகதி திருடிய குற்றச்சாட்டில் இயந்திரத்தில் வைத்துள்ளார் .
வங்கியின் உதவி முகாமையாளர் மறுநாள் இயந்திரத்தில் இருக்கும் பணத்தை எண்ணிய போது ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபா குறைந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து பணத்தை வைப்புச் செய்யும் சீ.சீ.டி.வி காட்சிகளை சோதித்த போது, பணத்தை வைப்புச் செய்யும் போது பாதுகாப்பு அதிகாரி பணத்தை திருடி தனது காற்சட்டை பைக்குள் போட்டுக்கொள்ளும் காட்சிகள் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் இன்று கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment